search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோலிய துறை மந்திரி"

    சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். #FuelPrice #DharmendraPradhan
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததை அடுத்து, சமீபத்தில் லிட்டருக்கு தலா ரூ.2.50-ஐ குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களும் தங்கள் வரியில் சிறிது குறைத்தன. இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை குறைந்தது.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சிறிது சிறிதாக உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மத்திய அரசு மீண்டும் விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுமா என்ற கேள்வி எழுந்தது.
     
    இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இது தொடர்பாக கூறியதாவது,



    பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயித்து வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். இதில் அரசின் தலையீடு எதுவும் இருக்காது.

    மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 ரூபாய் வரை குறைத்தது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு மாநில அரசுகளும் விலையை மேலும் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுத்தன.

    ஆனாலும், டெல்லி உள்ளிட்ட சில அரசுகள் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அது ஏன் என்று சம்பந்தப்பட்ட அரசுகளிடம்தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார். #FuelPrice #DharmendraPradhan #PetrolDieselPriceHike 

    ×